March 30, 2017 timesofindia.indiatimes.com
உத்தர பிரதேஷ மாநிலம் மீருட் நகரை சார்ந்த நகர உறுப்பினர்கள் வந்தே மாதர பாடலை நகராட்சி சபையில் கட்டாயம் பாடவேண்டும் என்று மீருட் நகர மேயர் ஹரிகாந்த் அஹுவாலியா உத்தரவிட்டுள்ளார்.
80 உறுப்பினர்களை கொண்ட மீருட் நகர நகராட்சியில் 45 பேர் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் , மீதம் உள்ள உறுப்பினர்களில் 25 பேர் முஸ்லிம்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர் பிரதேஷம் மாநிலத்தில் பா.ஜ.க அரசு ஆட்சி அமைத்த பிறகு, செவ்வாய்க்கிழமை(மார்ச் 28) இந்த நகர சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.
அதில் வந்தே மாதரத்தை பாட விரும்பாதவர்கள் வெளியே செல்லலாம் அல்லது பாடல் முடிந்தவுடன் உள்ளே வரலாம் என மேயர் தெரிவித்தார்.
வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது என்று அந்த சபையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெவித்தனர். அதற்கு “நீங்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால், வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்” என்று பா.ஜ.க கட்சியை சேர்ந்த ஒருவர் கூறினார்.
இதையடுத்து, இரு தரப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக, அனைத்து உறுப்பினர்களும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பட வேண்டும் என்று மேயர் அலுவாலியா உத்தரவிட்டார். இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.