March 30, 2017 தண்டோரா குழு
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா டில்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.
இந்தியாவின் மிக உயரிய விருதாக கருத்தப்படுவது பத்ம விருதுகள் ஆகும். கலை, விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம் பூசன் , பத்ம் விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்படும்.
இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பு கடந்த குடியரசு தினவிழாவில் அறிவிக்கபட்டது.அதன் படி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் விருதுகள் வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்கி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதில் கிரிக்கெட் வீரர் விராத்கோஹ்லி, பின்னணி பாடகி அனுராதா பட்வால் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்மபூஷண் விருது 7 பேருக்கும், பத்ஸ்ரீ விருதுகள் 75 பேருக்கு என மொத்தம் 89 பேர் பத்த விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.