• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியை எப்படி சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டார்கள், ராம் கோபால் வர்மா கிண்டல்.

April 21, 2016 தண்டோரா குழு

ரஜினி குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருக்கும் கருத்துக்களுக்கு ரஜினி ரசிகர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் எந்திரன் ‘2.0’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ஏமி ஜாக்சனும் நடித்து வருகிறார். எமிஜாக்சன் ரஜினியுடன் ஒரு செல்ஃபி எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிந்தார்.

இந்த நிலையில் அப்புகைப்படத்தை வைத்துக் கொண்டு முன்னணி இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்தார்.

அதில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் இந்த மனிதர், நட்சத்திர அந்தஸ்துக்கு அழகு முக்கியம் என்ற எண்ணத்தையே தூள் தூளாக்குகிறார் என்றும் பார்க்க நன்றாக இருப்பவர் அல்ல, சிக்ஸ் பேக்ஸ்சும் கிடையாது, சரியான உடலமைப்பும் கிடையாது, மொத்தம் இரண்டரை நடன அசைவுகள் தான் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகில் வேறெங்கும் இப்படியிருக்கும் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. இவர் கடவுளுக்கு என்ன செய்தார் கடவுள் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையைத் தந்துள்ளார் என்பது தெரியவில்லை. ரசிகர்களுக்குத் திரைப்படத்தில் என்ன பிடிக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது என்பதற்கு ரஜினி சார் தான் ஆகச்சிறந்த உதாரணம் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் எங்களுக்கு அழகு முக்கியமில்லை அவரது நடிப்பும் ஸ்டைலும் தான் எங்களுக்கு முக்கியம் அதனால் அவரை நாங்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டுள்ளோம் என ரஜினி ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவிற்கு ரீடுவிட் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க