April 3, 2017
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்-மீனாட்சி தம்பதி புதிய மனுதாக்கல் செய்துள்ளனர்.
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை எதிர்த்துநடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கதிரேசன் தம்பதியினர் மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த மனுவின் நகலை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அவர்களை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்துள்ளதாக இருக்கும் மனுவில் உள்ளது தனுஷ் கையெழுத்து கிடையாது, அது போலியான கையெழுத்து எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.