April 3, 2017
தண்டோரா குழு
கோவை வேளாண் பல்கலைகழக மாணவர்கள் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்களின்போராட்டத்தின் எதிரொலியாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நாளை காலை 8 மணிக்குள் விடுதியை காலி செய்யவும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்துள்ளார்.