April 4, 2017
tamilsamayam.com
முன்னாள் இந்திய கேப்டன் ‘தல’ தோனியின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பை (டி-20, 50 ஓவர், மினி உலகக் கோப்பை) வென்று காட்டிய ஒரே கேப்டன் உட்பட ஏகப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த தோனி, தனது கேப்டன் பொறுப்புக்களில் இருந்து விலகி, சாதாரண வீரராக கோலி தலைமையில் விளையாடி வருகிறார். 35 வயதான தோனி, விரைவில் கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வுக்கு வரும் நிலையில் எல்லா விதத்திலும் தனது எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில் அவரது பங்குதாரரான ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் தலைவர் அருண் பாண்டே தோனியின் மிக நெருங்கிய நண்பர். இவர் ‘தல’ தோனியின் நீண்டநாள் கனவாக இருந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.
கடந்த 2011 முதல் கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார் தோனி. இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒருநாள் சி.இ.ஓ.,வாக தோனி வேலை செய்துள்ளார்.
இதுகுறித்து அருண் பாண்டே கூறுகையில்,
“தோனி, கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக ஒரு கார்ப்ரேட் நிறுவனம் எப்படி இயங்குகிறது என்பதை காண ஆசையாக இருந்தார்.
அதனால் அவர் ஒருநாள் சி.இ.ஓ.,வாக வேலை செய்தார். அந்த ஒருநாளில் உண்மையான சி.இ.ஓ.,வாகவே மாறிய தோனி, மிகப்பெரிய முடிவுகளை சர்வசாதரணமாக எடுத்தார். என்றார்.