• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக மாநிலத்தின் குல்பர்காவில் கடுமையான தண்ணீர் பிரச்சனை

April 5, 2017 தண்டோரா குழு

தென் மாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குல்பர்கா நகரில் கடுமையான தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குளங்களும் நதிகளும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விலங்குகளும் பறவைகளை கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

தென் மாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா நகரில் கடுமையான தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 42 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெயில் அந்நகரில் பதிவாகியுள்ளது.

அந்நகரின் கரீப் நவாஸ் காலனியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,

“இரண்டு நாளுக்கு ஒருமுறை தான் தண்ணீர் லாரி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இருப்பினும், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. அரசாங்கம் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.

“தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தரும் அரசியல்வாதிகள் எங்களுடைய தேவையின் நேரத்தின்போது தங்கள் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர்” என்று மற்றொருவர் கூறினார்.

“இந்த பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிப்போய்விட்டது. லாரிகளில் கொண்டு வரும் தண்ணீர் மக்களுக்கு போதுமானதாக இல்லை” .

கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயாசந்திரா கூறுகையில்,

“நிலத்தடி நீர் கையிருப்பை கண்டுப்பிடிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தண்ணீர் கண்டுப்பிடிக்க 2௦௦௦ அடி ஆழங்கள் தோண்டப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்த வறட்சி நிவாரண நிதியை விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க