April 5, 2017 தண்டோரா குழு
சீனாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண் தேடிக்கிடைக்காமல் இறுதியாக ஒரு ரோபோவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீன மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் செங் ஜியாஜியா(31 வயது) செயற்கை நுண்ணறிவு நிபுணரானா இவர் ஹவாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது சீனாவின் ஷேஜியங் மாகணத்தில் உள்ள ஹன்க்ஷு நகரிலுள்ள “கனவு நகரம்” என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவியான ரோபோவை அவரே தயார் செய்தார். அதன் பெயர் யிங்யிங் ஆகும்.
சீன எழுத்துக்கள், படங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டுவதோடு சில அடிப்படை வார்த்தைகளை இந்த யிங்யிங் ரோபோவால் பேசவும் முடியும்.
இவர்களுடைய இந்த வினோத திருமணம் வெள்ளிக்கிழமை(மார்ச் 31) நடந்தது. திருமணத்தின்போது யிங்யிங் ரோபோவின் தலைமீது பாரம்பரிய சிவப்பு துணி போர்த்தப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் செங்கின் தாயார் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர்.
“31 வயது வரையில் தனக்கு விருப்பமான பெண் கிடைக்காததால் ஒரு ரோபோவை திருமண செய்துக்கொள்ள அவன் முடிவெடுத்தான்” என்று செங்கின் தாயார் கூறினார்.
மேலும் இந்த திருமணம் வினோதமாக தெரியலாம். ஆனால் வரும் ஆண்டுகளில் ரோபோ மனித உறவுகள் மிகவும் சர்வ சாதாரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், 35 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் ரோபோவை திருமண செய்துக்கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.