April 6, 2017 தண்டோரா குழு
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியம் காவல்துறையினரின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிப்பை படித்து முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக காத்திருப்பவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 277 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதில் விருப்பம் உள்ளது, அதில் அவர்களின் திறமை எவ்வாறு உள்ளது என்பனவற்றை அறிந்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் கிரிராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.