April 6, 2017 தண்டோரா குழு
கோவையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் வெப்பம் தாங்காமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 6) இரவு சுமார் 7 மணியளவில் பலத்த இடி சத்தத்துடன் கோவை அருகே உள்ள சரவணம்பட்டி,சேரன் நகர்,கவுண்டன்பாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை,டவுன்ஹால்,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தன.
இதில் ஒரு சில இடங்களில் வேகமான காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீரும் எனவும் அடுத்த போக விவசாயம் செய்ய மழை அதிக இன்னும் அளவில் பெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.