April 8, 2017 தண்டோரா குழு
நார்வே நாட்டில் நாள் ஒன்றுக்கு 7௦ முதல் 12௦ கப்பல்கள் வந்து செல்லக்கூடிய முதல் கப்பல் சுரங்கத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த சுரங்கப் பாதை 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும்.இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதை கட்ட 417 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வரும் 2௦23ம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த சுரங்க பாதை கட்டுவதற்கான திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. நிதி பிரச்னையில் அதை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், தற்போது தேவையான நிதி இருப்பதால், அதை செயல்படுத்த முடியும்” என்று நார்வேயின் போக்குவரத்து அமைச்சர் கேடில் சொல்விக் ஒல்சென் கூறினார்.
திட்ட மேலாளர் டெர்ஜே அன்டர்சன் கூறுகையில்,
இந்த சுரங்கப்பாதையை கட்ட 8 மில்லியன் டன் எடையுள்ள கற்பாறைகள் தேவைப்படுகிறது.மேலும் 7௦ மீட்டருக்கு குறைவாக இருக்கும் கப்பல்கள் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் 7௦ மீட்டருக்கு மேல் உள்ள கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.