April 10, 2017
தண்டோரா குழு
திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் நெருப்புடா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தனுஷ், விஷால், லாரன்ஸ், பிரபு, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் விஷால்,
ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்கள் அதை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இவரை தொடர்ந்து பேசிய நடிகர் லாரன்ஸ் விஷால் சொன்னதை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்றார்.