April 10, 2017
தண்டோரா குழு
பழனியில் இருந்து கோவை வரை செல்லும் கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவு காவலரான சிவராமச்சந்திரன் திங்கட்கிழமை பயணம் செய்துள்ளார்.
கோவை உக்கடம் வரை பயண சீட்டு எடுத்துவிட்டு காந்திபுரம் வரை பயணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பேருந்தின் நடத்துனர் பாண்டியராஜன் அவரிடம் அதற்கு கூடுதல் கட்டணம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவு காவலரான சிவராமச்சந்திரன் நடத்துனர் பாண்டியராஜனை கையில் வைத்திருந்த பேனாகத்தி எனப்படும் சிறிய அளவிலான கத்தியில் குத்தியுள்ளார்.
இதில் தொடை மற்றும் கையில் காயமடைந்த நடத்துனர் பாண்டியராஜன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துவிட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலர் சிவராமச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.