April 10, 2017 தண்டோரா குழு
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனமானது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமி அண்மையில் கோவைக்கு வந்தார். அப்போது கோவை போஸ்ட் இணையதள பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார்.
அதில், உங்கள் கட்சி சார்பில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கங்கை அமரன் குறித்து கேள்வி கேட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய சுப்பிரமணிய சுவாமி,
கங்கை அமரன் ஒரு மோசமான வேட்பாளர். தன்னை அறிமுகப்படுத்தியதுடன் மோடியை சென்று பார்க்காமல் ரஜினியை போய் பார்த்துள்ளார். ரஜினி ஒரே கொள்கையுடன் இருக்க
மாட்டார். ஓவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரி பேசுவார். ரஜினிக்கு சினிமாவில் ரசிகர்கள் உண்டு ஆனால் அரசியலில் இல்லை. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்.
தமிழ்நாட்டு மக்கள் முதலில் சினிமாக்காரர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்கள் 5 வருடம் பயிற்சி பெற்ற பின்பு தான் அரசியலுக்கே வர வேண்டும் என்றார்.
மேலும்,கமல் ஒரு டாம்பீக முட்டாள். அவருடைய ஆங்கிலம் எனக்கே புரியவில்லை. என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியவதில்லை. பின்னர் அவரே அதற்கு மன்னிப்பும் கேட்கிறார் என்றார்.
https://www.youtube.com/watch?v=L8trQA09rjY