April 11, 2017 தண்டோரா குழு
தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தி.மு.க.,வின் வெற்றி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும்,தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
“வகுப்பில் ஒரு மாணவன் முறைகேடான வகையில் தேர்வு எழுதினால் அந்த மாணவனை வெளியே அனுப்புவது தானே முறை அதை விடுத்து, தேர்வையே மொத்தமாக ரத்து செய்வது என்பது அந்த மாணவனை தப்பிக்க வைக்கின்ற செயல் மட்டுமின்றி, நம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மற்ற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தி.மு.க.,வின் வெற்றி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து இடைதேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என எது நடந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.” என்றார் மு.க.ஸ்டாலின்.
தேர்தல் ரத்து தொடர்பாக தீபா, பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.