April 11, 2017
தண்டோரா குழு
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி டிஜிபி சுனில் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,
புதுச்சேரியில் சமீப காலங்களாக வாகன விபத்துக்களின் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும் இந்த உத்தரவு வரும் மே மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த உத்தரவுக்கு புதுச்சேரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.