April 11, 2017 தண்டோரா குழு
ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜியோ டன் டனா டன் என்ற பெயரில் புதிய ஆபரை அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அளித்து வருகிறது.
இதற்கிடையில், ஜியோவின் சம்மர் சப்ரைஸ் ஆபரை டிராய் ரத்து செய்தது. எனினும் விரைவில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என ஜியோ இணையத்தளத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த வகையில் ஜியோ தளத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது, இவை நாள் ஒன்றிற்கு முறையே 1 ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா வழங்குகின்றன. ஏற்கனவே ஜியோ பிரைம் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை ரூ.309 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் (28 நாட்கள் x 3 மாதங்கள்) ஆகும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் அடங்கும்.
அதைப்போல் ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ நெட்வொர்க்கில் புதிதாய் இணைபவர்களுக்கு இந்த திட்டம் ரூ.408 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஜியோ பிரைம் திட்டத்திற்கென ரூ.99 செலுத்த வேண்டும்.