April 12, 2017
tamilsamayam.com
பத்தாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணி, ஹேர் பேண்ட் ராசியை பின்பற்றி வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் 9வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
மோசமான துவக்கம்:
இதில் “டாஸ்” வென்ற புனே அணி கேப்டன் ரகானே முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் புனே அணி வீரர்கள், மிகவும் செண்டிமெண்டாக தங்களது ஹேர்பேண்ட் ராசியை பின் பற்றி வருகின்றனர்.
இந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா, சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர், ஆடம் ஜம்பா என அணியில் விளையாடும் 11 வீரர்களில் 4 வீரர்கள் இந்த செண்டிமெண்டை பின்பற்றி வருகின்றனர்.