April 12, 2017 தண்டோரா குழு
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் தென்மேற்கு நகரமான அல் கிடியாவில் உலகின் மிக பெரிய கலாச்சார, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நகரம் அமைக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
334 சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நகரத்தின் கட்டுமான பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கி 2௦22ம் ஆண்டில் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச பங்குத்தாரர்களில் பொது முதலீட்டு நிதி அமைப்பு தான் இந்த திட்டத்திற்கு முதன்மையான பங்குத்தாரர் ஆவர்.
பொது இன்வெஸ்ட்மென்ட் பாண்ட் இயக்குனர்கள் அவையின் தலைவரும், துணை இளவரசர் முகமத் பின் சல்மானால் கூறுகையில்,
“இத்திட்டம் ஒரு கலாச்சார மைல்கல் ஆகும். எதிர்கால தலைமுறைகளின் பொழுதுபோக்கு, கலாச்சாரம் மற்றும் சமூக தேவைகளை சந்திக்கும் மையமாக அமையும்.சவூதி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கவும், எண்ணெய் வருமானத்தை மட்டும் சார்ந்திருப்பதை குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவதை இலக்காக கொண்டது தான் விஷன் 2௦3௦ திட்டம். அது புதிய பொழுதுபோக்கு திட்டத்திற்கு ஆதரவவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 7௦7 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் சிக்ஸ் பிளாக் தீம் பார்க் இந்த பொழுதுபோக்கு நகரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்” என்றார்.