• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்ணை தாக்கிய கூடுதல் எஸ்.பியை பணி நீக்கம் செய்யக்கோரி மனு

April 12, 2017 தண்டோரா குழு

மதுப்பான கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை தாக்கிய கூடுதல் எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் பொதுமக்கள் நேற்று மதுப்பானக் கடைகளை திறக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.இதில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அவ்வழியாக வந்த கோவை மாவட்டம் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காரை போராட்டத்தின் போது பொதுமக்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இதனால் போராட்டத்தை கலைக்க திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராடத்தை கலைத்தனர். அப்போது பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும், தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இந்நிலையில், மதுப்பானக் கடை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து விசாரிக்க பா.ம.க., தரப்பில் வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், “ நெடுஞ்சாலையில் மூடப்படும் மதுப்பானக்கடைகள், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திறக்கப்படுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திருப்பூரில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கூடுதல் எஸ்.பி பாண்டியராஜன் தடியடி நடத்தியுள்ளார். ஒரு பெண்ணை அடித்துள்ளார். ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது. பொது இடத்தில் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட கூடுதல் எஸ்.பி.,யை பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த தாக்கியதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்,” என்று பாலு குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இன்றே அதனை விசாரிக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க