April 13, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு தாயுமான சுவாமி.
தலச்சிறப்பு : இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை. உலகின் முதல் வழிபாடு சிவவழிபாடு ஆகும். மனிதனின் உடலில் ஜீவனாக (சிவமாக) இருப்பவர் சிவபெருமான். ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவையொட்டி மாலை 4.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறும். அப்போது 16 வகையான திரவியங்களால் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவில் சமய சொற்பொழிவு, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகாசிவராத்திரி அன்று சிவலாயம் சென்று சிவனை வழிபட்டால் ஒரு ஆண்டு சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலனை பெறலாம் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு 4 கால பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்தால் வாழ்வில் தொல்லைகள் நீங்கி நிம்மதியான மனத்தையும், நோயற்ற வாழ்வையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் : மகாசிவராத்திரி.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில்,
அரசலூர், தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்.