April 13, 2017 தண்டோரா குழு
திருப்பூர் தெற்கு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை என கூறி, அதிமுக எம்எல்ஏ குணசேகரன் தனி ஒருவராக திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள், சசிகலா அணியில் இருந்து விலக முயற்சிக்கின்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை என கூறி, அதிமுக எம்எல்ஏ குணசேகரன் தனி ஒருவராக திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பூர் குமரன் நினைவகம் அருகே, 39 கோரிக்கைகளை வலியுறித்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர், அரசு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என புகார் தெரிவித்து வருகிறார். அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் திடீரென விஸ்வரூம் எடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் எம்.எல்.ஏ ஒருவர் அந்த அணிக்கு எதிராக போர் கோடி தூக்கியுள்ளது அந்த அணிக்கு தலைவலி உருவாகியுள்ளது.