April 13, 2017 தண்டோரா குழு
தில்லியில் 31-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தினமும் பல விதமான போராட்டங்களை நடத்தி வரும் அவர்கள் இன்று தில்லியில் விவசாயிகள் குட்டிக் கரணம் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள்,மாணவர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் மாணவர்கள்,மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.