April 13, 2017
தண்டோரா குழு
அழகான பெண்களின் உடலமைப்பு 36-24-36 என்ற விகித்ததில் இருக்கும் என்று சிபிஎஸ்இ பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்சர்ச்சை எழுத்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முனைவர் வி.கே.சர்மா எழுதிய ” உடல் நலம் மற்றும் உடற்கல்வி” என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைதான் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு படிக்கும் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த புத்தகத்தில் உடல்கூறும், விளையாட்டும் என்ற அத்தியாயத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
அதில், ஆரோக்கியமான பெண்களின் அங்க அளவு 36-24-36 ஆக இருக்க வேண்டும் என்றும் V வடிவம் கொண்டவர்கள் அழகான ஆண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேசஅழகிப்போட்டிகளில்பெண்களின்உடல்அளவிற்குஇதுவேஅளவுகோலாகநிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்உலகம் முழுவதும் இந்த அளவு அமைப்பு கொண்ட பெண்களே அழகானவர்கள் என்றும், ஒல்லியான பெண்களே அழகானவர்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் உடலமைப்பு பற்றி அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.