April 13, 2017 timesofindia.indiatimes.com
தஞ்சாவூரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 7 அடி நீளமுள்ள முதலையை தீயனைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன் மிட்டனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வகுடகுடி என்னும் கிராமத்தின் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. அந்த ஆற்றங்கரையில் பல முதலைகள் உள்ளதாகவும் சில சமயங்களில் அது குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வகுடகுடி பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுடைய முதலை ஒன்று புதன்கிழமை(ஏப்ரல் 12) சுற்றிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த கிராமத்தில் வசித்து வந்த வின்சென்ட் என்பவர் தன் வீட்டின் முன் கதவை திறந்துள்ளார். அப்போது அவருடைய வீட்டின் முன் முதலை நின்றுக்கொண்டிருந்ததை பார்த்த அவர் பயமடைந்து, தீயனைப்பு மற்றும் மீட்பு சேவை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த அவர்கள் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்து, உள்ளூர் மக்கள் உதவியுடன் அந்த முதலையை அங்கிருந்து மீட்டனர்.
இது குறித்து வனதுறை அதிகாரி கூறுகையில், “வகுடககுடி அருகிலுள்ள குளத்தில் சில முதலைகள் வாழ்ந்து வருகின்றன. கொள்ளிடம் ஆற்றுத்தண்ணீர் அந்த குளத்தில் எப்பொழுதும் இருக்கும். ஆனால், தற்போது அந்த இடம் தண்ணீரில்லாமல் வறண்டு போய்விட்டது. இதனால், தண்ணீர் தேடி முதலைகள் கிராமத்திற்குள் வந்திருக்கலாம். கிராமத்து மக்கள் அதிகாலையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் ஒரு வேலை வெளியே செல்வது அவசியமென்றால், மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்” என்றார்.