April 14, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்
சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பிஸ்தா – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கிளறி விடவும்.
அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை தூக்கி எறியாமல், அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பௌலில் ஊற்றி குளிர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் பரிமாறினால், பாசுந்தி ரெடி!!!