April 14, 2017
தண்டோரா குழு
மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் சந்திப்பு. சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.
கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இதனை அடுத்து விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று தம்பித்துரையை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இதனை அடுத்து இன்று சென்னை வந்த தம்பித்துரை தினகரன் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன் ,சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் வர வாய்ப்பு உண்டு என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.