April 14, 2017 தண்டோரா குழு
1௦8 வயதான கைதி ஒருவர் நன்னடைத்தை விதிகளின் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகவும் வயதான கைதியும் இவர் தான்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சார்ந்தவர் சௌதி யாதவ்.இவர் கொலை வழக்கு ஒன்றில் 1979-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2௦௦3-ம் ஆண்டு நீதிமன்றத்தால் குற்றவாளியான அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டை அனுபவித்த அவருக்கு தற்போதைய வயது 1௦8 ஆகும். செளதி யாதவின் குடும்பத்தார் அவரை விடுவிக்க கோரி தொடர்ந்து அரசுக்கு மனு அளித்து வந்தனர்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியில் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தார். செளதி யாதவின் குடும்பத்தாரின் மனுவை ஏற்றுக்கொண்ட அவர் செளதி யாதவை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால் அங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் காரணமாக செளதி யாதவின் விடுதலை 3 மாதம் காலம் தள்ளி வைக்கப்பட்டது.இதனிடையே தற்போது செளதி யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்
“ எனது குடும்பத்தாரின் முயற்சியாலும், சிறையில் என்னுடைய நன்னடைத்தை காரணமகாவும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில் எனது குடும்பத்தை நினைத்து அவர்களை பார்க்க முடியவில்லையே என நான் மிகவும் வருத்தபட்டேன்,” என்றார் அவர்.