April 15, 2017 findmytemple.com
சுவாமி : தஞ்சபுரீஸ்வரர்.
அம்பாள் : ஆனந்தவல்லிதாயார்.
மூர்த்தி : பச்சைக்காளி, பவளக்காளி, சரஸ்வதி, கஜலட்சுமி.
தலவிருட்சம் : வன்னி மரம்.
தலச்சிறப்பு :
தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய சிவன் கோவில் ஆகும். துர்க்கை தாரகனை வதம் செய்த பிறகு இறைவனுடன் இணைந்து சாந்த சொரூபினியாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த தலம். பிரகதீச்வரர் கோவிலுக்கும் முந்தை காலத்தில் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும். இத்தல சிவபெருமானை வழிபட்டு, பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இத்திருத்தலம் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருகோவில்களில் ஒன்றாகும்.
தல வரலாறு : குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ராவணனிடம் தனது ஆட்சி, செல்வங்கள், அனைத்தையும் இழந்தான். குபேரன் இலங்கையை மீட்க வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரரை வழிபட்டார். சிவபெருமான் அருளால் இழந்த செல்வங்கள் அனைத்தும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றான் என்பது ஐதீகம். இதனால் தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் குபேர யாகம் நடத்தப்படுகிறது.
வழிபட்டோர் : குபேரன்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் :
ஐப்பசி மாத அமாவாசை அன்று குபேர யாகம்.
அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.
கோவில் முகவரி : அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்,வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர்.