• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைனா நந்தினிக்கு முன்ஜாமீன் ரத்து! விரைவில் கைது?

April 15, 2017 tamilsamayam.com

கணவர் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை மைனா நந்தினி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிட்டி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜனின் வம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்களுக்கு இவருக்கு பெயர் கொடுக்கவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் நடித்து வந்த சீரியல் இவருக்கு மைனா என்ற குடும்பப் பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்த தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் போது சென்னையில் உடற்பற்சி மையம் நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சென்னை வளசரவாக்கத்தில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து கார்த்திகேயனின் உறவினர்கள் கூறுகையில், நந்தினி தான் விவாகரத்து செய்யக்கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளான் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நந்தினி கூறுகையில், கார்த்திகேயன், வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக நந்தினி தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், அவர் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி நீதிபதி உத்தரவிட்டார். இதன் காரணமாக நந்தினி எந்நேரமும், போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க