April 15, 2017
தண்டோரா குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கடலோரா மாவட்டங்களான கடலூர்,ராமநாதபுரம், புதுக்கோட்டை தூத்துகுடி, நாகை, சென்னை,கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மீன்பிடி மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
45 நாட்கள் நீடிக்கும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அவர்களுது படகுகளுக்கு வண்ணம் பூசுவது, வலைகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு நிவராண தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மீன்பிடி தடை காலத்தை 60 நாட்களாக உயர்த்துவது குறித்த திட்டம் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
மீன்பிடி தடை கால நிவாரணத்தை தடை காலத்திலேயே அளிக்க வேண்டும் என்றும் நிவராண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல் இலங்கை கடற்படையினரின் அத்து மீறல்களுக்கு இந்த தடை காலம் முடிவதற்குள் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.