April 15, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும் என மத்திய சுகாதார அமைச்சர் அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில்,
” தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். நீட் தேர்விலிருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு இன்று வரை ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேட்டி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.