• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய 3D பிரிண்டிங் சாக்லேட்

April 15, 2017 தண்டோரா குழு

பெல்ஜியத்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாக்லேட் வகைகள் தயாரிக்கப்படுகிறது.

பெல்ஜியம் நாட்டின் ‘மியாம் சாக்லேட்’ என்னும் சாக்லேட் கடையில் ௦.2 மில்லிமீட்டர் அளவிலான உருக்கிய சாக்லேட்டை கொண்டு 3D வடிவிலான சுவையான சாக்லேட்டை தயாரித்து வருகிறது. உணவு துறையின் தொழில்நுட்ப காரணங்களை ஆராய்ந்து, சிறப்பு 3D அச்சுபொறிகள் தயாரிக்கப்படுகிறது. பெல்ஜியம் நாட்டின் லைஜு பல்கலைக்கழகத்தின் ஸ்மார்ட் நுகர்வு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்த சாக்லேட்டை தயார் செய்யும் இயந்திரத்தை மியாம் நிறுவனம் வாங்கியது.

வாடிக்கையாளர்களுக்கு 3D அச்சிடப்பட்ட சாக்லேட் பொருள்கள் மூலம் செய்திகள், சின்னங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், டெடி பியர், பட்டாம்பூச்சி, மிக்கிமவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி ஆகிய வடிவிலும் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.இந்த சாக்லேட் முறையை தயாரிக்க 1௦ நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை ஆகும். சாக்லேட்டின் வடிவம், அதனுடைய அளவு, எந்த மாதிரியான சாக்லேட்டால் தயாரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையில் அதற்கான தொகை வசூலிக்கப்படும்.

இது போன்ற புதிய தொழில்நுட்பத்தால் ஆன 3டி சாக்லேட் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க