April 17, 2017
தண்டோரா குழு
ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் மீண்டும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினார் இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜனநாய ரீதியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கட்சியில் எந்தப்பிளவும் இல்லை இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் தற்காலிகமாக சின்னம் தரப்பட்டுள்ளது, இரட்டை இலை முடக்கப் படவில்லை. இரட்டை இலை சின்னம் மீண்டும் எங்களுக்கு கிடைக்கும். என்றார். மேலும், பன்னீர்செல்வம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.