April 18, 2017
தண்டோரா குழு
சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., போர்க்கப்பலை பார்வையிட வருமாறு எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அனைவரும் காலை 8 மணிக்கு ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.ஐ.என்.எஸ். போர்க் கப்பலை சுற்றி பார்த்த அவர்கள் சிறிது தூரம் அதில் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.