April 19, 2017 தண்டோரா குழு
எகிப்தில் தொல்பொருள் ஆய்வின் போது 3,5௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறைகளிலிருந்து 6 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து எகிப்து தொல்பொருள் ஆய்வு மிஷன் தலைவர் முப்தபா வசீறி கூறுகையில்,
“எகிப்தை ஆண்ட 18-வது பாரோ வமசத்தின் கல்லறைகள் லக்சர் என்னும் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லறைகள் சுமார் 3,5௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கருதப்படுகிறது.
இந்த கல்லறையிலிருந்து 1,௦௦௦க்கும் மேற்பட்ட சிலைகளை கண்டுப்பிடித்துள்ளோம். அந்த சிறிய சிலைகளுக்கு ‘உஷப்தி’ என்று பெயர். அந்த சிலைகள் தங்களுடைய மறுவாழ்வில் உதவி செய்யும் என்று எகிப்தியர்கள் நம்பினர். அதனால் அவர்களை அடக்கம் செய்யும்போது அந்த சிலைகளை அவர்களுடன் புதைத்து விடுவர் ” என்றார் அவர்.
இந்த கல்லறைகளில் சிவப்பு, நீளம், கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் ஆகிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட சவபெட்டிகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை சோதனை செய்த அவர்கள் கூறுகையில்
“ சில சவப்பெட்டிகள் நல்ல முறையில் இருந்தது. ஆனால் வேறு சில சவபெட்டிகள் உடைந்து மோசாமான நிலையிலிருந்தது. வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பானைகளும் அந்த கல்லறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது,“ என்றனர்.
மேலும் அந்த கல்லறைகள் சதுரங்க வடிவில் ஒரு ஹால், ஒரு தாழ்வாரம், மற்றும் ஒரு உள்ளறையை கொண்டதாக அமைந்துள்ளது.” என்று எகிப்து தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.