April 19, 2017 தண்டோரா குழு
செயற்கைக்கோளை பயன்படுத்தி தங்களுடைய விமானங்களை கண்காணிக்கும் என்று மலேசியா அரசு அறிவித்துள்ளது.
தென் சீன கடல் மேல் பறந்துக்கொண்டிருந்த மலேசிய விமானம் M370 விமானம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காணமல் போய்விட்டது. அந்த விமானத்தை தேட சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கின. ஆனால் அதுக்குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தது. இறுதியாக, அது கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து, விமானங்கள் பயணிக்கும் பாதையை விமான கட்டுப்பட்டு அறை மூலமாகவோ அல்லது செயற்கைக்கோள் மூலமாகவோ கண்காணிக்கலாம் என்று அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த யோசனைக்கு சம்மதம் தெரிவித்த மலேசிய அரசு, செயற்கைகோள் மூலமாக விமானங்களை கண்காணிக்கும் முறையை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த ஐரான் எல்எல்சி என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது மலேசியா. அதன்படி, அந்த நிறுவனத்தின் புதிய செயற்கைக்கோள் பிணையம் வரும் 2018 ம் ஆண்டு முடிவடையும். அதன் பிறகு, தங்களுடைய விமானங்களை கண்காணிக்க புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை மலேசியா பயன்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.