April 20, 2017
தண்டோரா குழு
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் ஓன்று தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அந்த விளம்பரத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில், மக்களுக்கு எது சிறந்தது என்று அரசு முடிவு செய்யட்டும். ஒருவர் இதை தான் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூற நான் யார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று சன்னி பதிலளித்துள்ளார்.