April 20, 2017
தண்டோரா குழு
உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.
எனினும், படம் வெளியாவதற்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது படக்குழு. இதையும் தாண்டி வெற்றிபெற்றது விஸ்வரூபம். இதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார் கமல்ஹாசன். ஆனால் இடையில் என்ன பிரச்சனையோ படம் அப்படியே நின்றுவிட்டது.
இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.விஸ்வரூபம் 2 படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.