April 20, 2017 தண்டோரா குழு
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனின் உயிரை புகைப்பட நிபுணர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்ளநாட்டு போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகளால் முடியவில்லை.
அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் மக்களால் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
புகைப்பட நிபுணர் அப்த் அல்காதர் ஹபக் என்பவர் சிரியாவில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் அவரும் சிக்கி பலத்த காயங்களுடன் மயக்கம் அடைந்துள்ளார். அவர் கண் விழித்த போது, அந்த இடம் முழுவதும் சேதமடைந்து, குழந்தைகளுடைய இறந்த உடல்களை கண்டார்.
உடனே அவர் காயமடைந்த மக்களுக்கு உதவ தொடங்கினார். அவருக்கு உதவியாக அவருடைய நண்பரும் களத்தில் இருந்தார். அப்போது ஒரு சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான் அவனை காப்பற்ற அவர் தனது காயத்தையும் பொருட்படுத்தாது சிறுவனை தூக்கி கொண்டு ஓடி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
மற்றொரு புகைப்பட நிபுணர் எடுத்த புகைபடத்தில், ஹபக் ஒரு குழந்தையின் இறந்த உடலை கண்டு, மண்டியிட்டு கதறி அழுவும் காட்சி இருந்தது. அதை பார்த்தவர்களுடைய உள்ளம் உடைந்துவிட்டது.