April 21, 2017 தண்டோரா குழு
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
“19-ம் நூற்றாண்டில் நடந்த ஆங்கிலோ சீக் போரின்போது இந்தியர்கள் வெற்றிபெற அவர்களுக்கு ஆதரவு அளித்த ஆங்கிலேயர்களுக்கு மகாராஜா ரஞ்சித் சிங் அந்த வைரத்தை பரிசாக அளித்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அந்த வைரம் தற்போது இங்கிலாந்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வெள்ளிக்கிழமை விசாரித்தது. அந்த விசாரணையின் முடிவில், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.