April 22, 2017 தண்டோரா குழு
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை முன்பதிவு செய்தால் வீடு தேடி டெலிவரி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பெட்ரோல், டீசலை ஆர்டர் செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும்.வீடு தேடி பெட்ரோலியப் பொருட்களை டெலிவரி செய்தால், மக்கள் பெட்ரோல் நிலையங்களை தேடி அலையாமல், நேரத்தை சிக்கனப்படுத்த முடியும்.
இத்திட்டத்தின்படி ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் செலுத்திவிட்டால், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனமே வீட்டுக்கு வந்து சப்ளை செய்துவிடும்.
மேலும் பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.