April 22, 2017
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களாக, தலைநகர் தில்லியில் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிற்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராடிய விவசாயிகள் போராடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று விவசாயிகள் சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.