April 22, 2017 தண்டோரா குழு
வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகூல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன அது சிறிது நேரத்திலேயே கிழிந்து விட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் தற்போது 23 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த அணையின் உயரம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. வைகை அணையின் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதனால் வைகை அணையின் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தண்ணீரின் மேல் தெர்மாகூல் அட்டைகள் வைக்க தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு தெர்மாகூல் அட்டைகளை நேற்று மிதக்க விட்டனர்.
காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே கரை ஒதுக்கியது. சில அட்டைகள் காற்றில் கிழிந்ததும் விட்டது. தற்போது இந்த முயற்சி தோல்வியடைந்ததால் அட்டைகளுடன் இணைத்து மரக்கட்டைகளும் மிதக்க விட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.