• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி விரல் அசைவில் உலகம் வசப்படும்.

April 26, 2016 தண்டோரா குழு

உலகில் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உட்கார்ந்த இடத்தில் இருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
தொழில்நுட்பங்கள் அதிகம் வளர்ச்சி அடைந்து விட்டதால் மனிதர்கள் பல்வேறு வேலைகளை ஒன்றாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பல விதமான கண்டுபிடிப்புகளும் வந்துவிட்டன. அந்த வகையில் உருவாக்கப்பட்டது தான் ஆண்ட்ராய்ட் வசதி. இது மனிதர்களுக்குப் பல வகையில் உதவுகிறது. அதிலும், பட்டனை அமுக்கிய காலம் போய் தொடுதிரை மூலம் எளிதில் உபயோகிக்கும் வசதியும் வந்து விட்டது. ஆனால் அந்தத் தொடுதிரை வசதியைப் பயன்படுத்தாமல் தங்கள் கைக்கடிகாரம் மூலம் அதனைப் பயன்படும் வகையில் புதிய வசதியாக ஸ்மார்ட் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த ஸ்மார்ட் வாட்ச்சையும் தொடாமல் தங்கள் கை விரல்களின் அசைவினால் ஒரு மின்னணு பொருளை பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள்.
வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் மின் பொறியாளர்கள்துறையில் படித்து வரும் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்சில் “சோனார் டெக்னாலஜியை” பயன்படுத்தி “பிங்கேர்லோ” என்ற புதிய வாட்ச்சைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் மூலம் எந்தத் தொடுதிரையையும் தொடாமல் விரல்களின் அசைவினால் மின்னணு பொருட்களை ரிமோட் இல்லாமல் பயன்படுத்த முடியும். மேலும், இந்த “பிங்கேர்லோ” தொழில் நுட்பத்தில் ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றின் உதவியுடன் தனியாக எதையும் பயன்படுத்தாமல் விரல்களின் அசைவினை வைத்து துல்லியமாக இந்தக் கருவியால் கணிக்க முடியுமாம். இதுமட்டுமின்றி இதை தன்னுடைய பாக்கெட்டில் வைத்தாலும் அது இயங்கிக் கொண்டு தான் இருக்குமாம்.

இந்த பிங்கேர்லோ என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம் ரிமோட் இல்லாமல் வால்யூம் குறைக்கவும், அதிகமாக்கவும் முடியுமாம், அதைப்போல், ஒரு சாதனத்தின் மெனுவையும் அட்ஜஸ் செய்ய முடியுமாம்.

இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் மின் பொறியாளர்கள் துறை துணைப் பேராசிரியர் ஷியாம் கொல்கோட்டா கூறுகையில்,

பொதுவாக எந்த ஒரு வன்பொருள்களுக்கும் ஸ்ப்பீகர், மைக்ரோபோன் போன்ற தனி தனி பொருட்கள் தேவைப்படும் ஆனால் இதற்கு அது போன்று எதுவும் தேவை இல்லை. இதனால் அதன் விலையும் குறைவு தான். மேலும், இதற்கு 8 மில்லி மீட்டர் அருகில் இருக்கும் எந்த ஒரு மேற்பரப்பின் மீது வைத்து எழுதினாலும் இயங்கும் வசதியும் இதில் உண்டு என்றார்.

ராஜலட்சுமி நந்தகுமார், வாஷிங்டன் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் மின் பொறியாளர்கள் துறை மாணவி கூறும்போது,

ஸ்மார்ட் வாட்சில் டைப் செய்து அதனைப் பயன்படுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருந்தது ஆனால், இந்த பிங்கேர்லோ கருவி மூலம் கையில் எவ்வித சென்சார் மற்றும் பொருள் இல்லாமல், எந்த ஒரு பொருள் மீதும் கை விரலை வைத்து எழுத முடியும் என்றார்.

மேலும் படிக்க