April 24, 2017 தண்டோரா குழு
பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத்.அவருக்கு வயது 87. ‘குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம வில்லன்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, ஐந்துதேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், 20க்கும் மேற்பட்ட நந்தி விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது ‘தாதா சாகேப் பால்கே’ விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.