April 25, 2017 tamilsamayam.com
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், 25 ஆண்டுகாலம் தனது திரையுலக வாழ்வில், தேசிய விருதுக்கு தான் தாகுயானவனல்ல என்று கருதினால் எனது தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
‘ரஸ்டம்’ திரைப்படத்தில் இந்திய கடற்படை வீரராக நடித்திருந்த அக்ஷய் குமார், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான அக்ஷய்குமார் இது குறித்து கூறுகையில்,’நான் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் தேசிய விருது அறிவிக்கப்படும்போது, அதற்கு தகுதியானவர்கள் யார் என்ற விவாதம் எழுகின்றது. எனக்கு 25 ஆண்டுகள் கழித்து தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என்று கருதினால், எனது தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
அக்ஷய்குமார் நடித்த ‘கில்லாடி’, ‘மொஹ்ரா’ போன்ற ஆக்ஷன் படங்களை தாண்டி, தற்போது தேசியப்பற்றுள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘ரஸ்டம்’ மட்டுமல்லாது, ‘ஹாலிடே:எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி’, ‘பேபி’, ‘ஏர்லிஃப்ட்’ போன்ற படங்கள் தேசியம் பேசும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.