April 25, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவர் வெறும் இலைகளையும் மரக்கட்டைகளையும் உண்டு வாழ்ந்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தில் மெஹமூத் பட்(5௦) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக வெறும் இலைகளையும் மரக்கட்டைகளையும் உண்டு வாழ்ந்து வருகிறார்.
“தொடக்கத்தில் என்னுடைய குடும்பத்தில் வறுமை அதிகமாக இருந்தது. நல்ல உணவை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. அப்போது என்னிடம் நல்ல வேலையும் கிடையாது. பிச்சை எடுத்து வாழ்வதை விட இலையையும் மரக்கட்டைகளையும் உண்டு வாழ்வது எவ்வளவோ நல்லது என்று தீர்மானித்தேன். அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிட்டது.
தற்போது வேலை கிடைத்து நன்றாக சம்பாதிக்கிறேன். இருப்பினும், இந்த பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. இதனால் நான் ஒரு நாளும் நோய்வாய்பட்டதில்லை. ஆலமரம், புங்கைமரம், மற்றும் தலி மரத்தின் மரக்கட்டைகளை உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று மெஹமூத் பட் கூறினார்.
மெஹமூத் பட் நண்பர் குலாம் முஹமத் கூறுகையில்,
“இதுவரை மருத்துவமனைக்கோ பட் சென்றதில்லை. இத்தனை ஆண்டுகள் வெறும் இலைகள் மற்றும் மரக்கட்டைகளை மட்டும் உண்டு வந்த ஒருவர் எப்படி நோய்வாய்படாமல் இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டதுண்டு” என்றார்.