• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த முதல் பெண்மணி

April 25, 2017 தண்டோரா குழு

விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சனை பெற்றுள்ளார்.அந்த பெண்மணிக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமெரிக்க தளபதி பெக்கி விட்சன்,இவர் விண்வெளி ஆய்வகத்தில் 534 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், 2௦16ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வாளர்கள் ஜெப் வில்லியம்ஸ் மற்றும் ஸ்சாட் கெல்லி ஆகியோர் 34௦ நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருந்தது பெரும் சாதனையாக கருதப்பட்டது. ஆனால் அவர்களுடைய சாதனையை பெக்கி முறியடித்துள்ளார்.

இது தொடர்பாக சர்வதேச விண்வெளி நிலையம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“விண்வெளி வீரர் பெக்கி விட்சன், ஜெப் வில்லியம்சின் சாதனையை முறியடித்துள்ளனர்” என்று அறிவித்துள்ளது.

பெக்கி விட்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

“என்னுடைய ஒவ்வொரு பயணத்தையும் வெற்றியுடன் முடிக்க எனக்கு உதவிய அனைவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நாசா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பூமியிலிருந்து விண்வெளிக்கு தொடர்புக்கொள்ளும் விசேஷ தொலைபேசி மூலம் பெக்கியுடன் உரையாற்றி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது, டிரம்பின் மகள் இவாகா டிரம்ப் மற்றும் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், இந்த உரையாடல் சுமார் 2௦ நிமிடம் நடைபெற்றது. இதை நாசா தொலைக்காட்சி, பேஸ்புக் பகுதி மற்றும் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பியது.அதுமட்டுமின்றி, அமெரிக்க நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள், அருங்காட்சியகம், அலுவலகங்களிலும், சர்வதேச அளவிலும் ஒளிபரப்பபட்டது”

மேலும் படிக்க