April 26, 2017
தண்டோரா குழு
சென்னை சிஐடி காலனி உள்ள கனிமொழியை அவரது இல்லத்தில் நடிகையும், காங்கிரஸ் உறுப்பினருக்மான நக்மா இன்று சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைந்த பின், பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியை அவரது இல்லத்தில், நடிகையும், காங்கிரஸ் கட்சி ஆதரவாளருமான நக்மா சந்தித்துப் பேசியுள்ளார்.
அண்மையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே அவ்வளவாக பெரிதாக உறவு இல்லாத நேரத்தில், தற்போதுள்ள அரசியல் சூழலில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணி உறவைப் புதுப்பிக்கும் வகையில் ஏதேனும் பேச்சு நடந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.